வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 ஜூன், 2010

வடமராட்சியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் கரை திரும்பவில்லை..!

வடமராட்சியில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இரு தொழிலாளர்கள் இன்னும் கரை  திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற வலிகாமம் வடக்கு மயிலிட்டித்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்களான தெணியம்மன் கோவிலடி வியாபாரிமூலையில் வசிக்கும் அமுர்தராஜா சுபோசன் (வயது 21) மற்றும் ஜோசப் பீற்றர் அன்ரனி அருள்தாஸ் (வயது 22) ஆகிய இருவருமே இவ்வாறு கரை திரும்பவில்லை என அவரது தாயார் திருமதி அமுர்தராஜா ஜீவநதி வடமராட்சி ஈபிடிபி அரசியல் அலுவலகத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்றவர்கள் நேற்று கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இன்று (22) பிற்பகல் 4.00 மணியாகியும் கரை திரும்பவில்லை. எனவே கடும் காற்று வீசுவதனால் இவர்களது படகு நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆகவே கடற்படையினருடன் தொடர்பு கொண்டு இவர்களைத் தேடிக் கண்டு பிடித்துத் தருமாறு திருமதி அமுர்தராஜா ஜீவநதி கோரியுள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’