வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 ஜூன், 2010

இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதியை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் தீர்மானம்

இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்திப்பதற்கு தமிழக எம்.பி.க்கள் குழு தீர்மானித்துள்ளது. இதற்காக அவர்கள் இன்று புதுடில்லிக்கு பயணமாகவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் விடுவித்தல், அவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மீள்க்குடியேற்றம் போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் குறித்த தமிழக எம்.பி.க்களினால் வலியுறுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, முதல்வர் கருணாநிதியின் ஆலோசனைக்கமைய ஏற்கெனவே புதுடில்லி பயணமாகியுள்ளதாகவும் மேற்படிச் செய்திகள் மேலும் தெரிவித்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’