வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 ஜூன், 2010

போபால் விபத்து: 8 பேருக்கு சிறை

போபால் விஷவாயு கசிவில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேருக்கு இந்திய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத் தலைநகரான போபாலில், பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து விஷவாயு கசிந்து பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
யூனியன் கார்பட்டு நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலையிலேயே இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கிரிமினல் சட்டங்களின் அடிப்படையில் பொறுப்பேற்க நேர்ந்திருப்பது இதுவே முதல் முறை.
விபத்தால் ஏற்பட்ட பிறப்புக் குறைபாடு
விபத்தால் ஏற்பட்ட பிறப்புக் குறைபாடு
தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ள எட்டு பேரில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மற்ற ஏழு பேருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட்டின் தொழிற்சாலையிலிருந்து மீதைல் ஐசோசயனைட் என்ற விஷவாயு கசிந்ததில் மூவாயிரம் பேர் உடனடியாக உயிரிழந்தனர். பின்னர் சுமார் பதினையாயிரம் பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் இன்றளவும் பிறவிக் கோளாறுகளுடன் குழந்தைகள் பிறந்துவருகின்றன. உலகில் மிக அதிக பாதிப்புகளை உண்டாக்கிய தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’