வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 ஜூன், 2010

கிளி. கனகபுரம் மகாவித்தியாலய மாணவர்கள் உள ஆற்றுப்படுத்தும் நோக்கில் அகில இலங்கை கல்விச் சுற்றுலா!

மீளக் குடியமர்ந்துள்ள பிரதேசத்திலுள்ள கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் ஒன்றான கனகபுரம் மகாவித்தியாலய மாணவர்கள் உள ஆற்றுப்படுத்தும் நோக்கில் அகில இலங்கை கல்விச் சுற்றுலா ஒன்றை இன்றைய தினம் ஆரம்பித்துள்ளனர். 

இந்த ஆரம்ப நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் திரு.வைத்தியநாதன் தவநாதன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். 
பாடசாலை அதிபர் திரு.தர்மரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு. தவநாதன உரையாற்றுகையில் மீளக்குடியமர்வு நடைபெற்ற மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே இந்தப் பாடசாலை ஏறக்குறைய இயல்பு நிலைக்கு வந்துள்ளது. இவ்வாறு இந்தப் பாடசாலை மீள் நிலைக்கு வருவதற்கு அதிபர் ஆசிரியர்களுடைய கடுமையான உழைப்பும் முயற்சியுமே காரணமாகும். எனவே அவர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகிறோம். 
யுத்தத்தின் துயரங்களைச் சுமந்து நிற்கும் மாணவர்களின் உள ஆற்றுகைப்படுகை என்பது மிக அவசியமான ஒன்றாகும். இதற்கான வேலைத் திட்டங்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் இக்கல்விச் சுற்றுலா பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் அமைய வேண்டும் என அவர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். 
இச் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளைச் செய்த பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் திரு.எம்.சந்திரகுமார் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி ஆகியோருக்கு கனகபுரம் மகாவித்தியாலய பிரதி அதிபர் திரு. சேதுபதி நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’