வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 ஜூன், 2010

சச்சினுக்கு இந்திய விமானப்படையில் கௌரவ கேப்டன் பதவி!

பிரபலமானவர்கள் ஆற்றிய நாட்டுப் பணியை அங்கீகரிக்கும் விதத்தில் ராணுவப் படைகளில் கௌரவ பதவி அளிப்பது வழக்கம். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்கு இந்திய விமானப்படையில் கௌரவ குழு கேப்டன் பதவியை குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.
கிரிக்கெட் வீரராக சச்சின் புரிந்த சாதனைகளையும், விளையாட்டுத்துறையில் பதித்துள்ள முத்திரையையும் அங்கீகரிக்கும் விதத்தில் இந்திய விமானப்படை அவருக்கு கௌரவ குழு கேப்டன் பதவியை அளிக்க முன்வந்தது.
அங்கீகாரம் மட்டுமல்லாமல், இந்திய விமானப்படையில் அவரை இணைப்பது இளம் தலைமுறையினர் நாட்டுக்குப் பணியாற்ற விமானப்படையில் சேருவதற்கான உத்வேகமும் அளிக்கும்.
இந்த கௌரவத்தை ஏற்றுக் கொண்ட, தற்போது வெளிநாட்டில் உள்ள சச்சின் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
''இந்திய விமானப்படையில் கௌரவ குழு கேப்டன் பதவி அளித்துள்ளதை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். ஒரு இந்தியனாக, துடிப்புமிக்க இந்தப் படையுடன் இணைவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்திய விமானப்படையின் தூதராக என்னால் செய்ய இயன்ற அனைத்தையும் சிறப்பாகச் செய்வேன்," என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய விமானப் படையைப் பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை எதிர்நோக்கியிருப்பதாகவும், விமானப் படையினரை சந்தித்து பேச ஆவலாக இருப்பதாகவும் சச்சின் மேலும் கூறினார்.
இதுவரை 21 பேருக்கு, விமான லெப்டினன்ட் முதல் ஏர் மார்ஷல் வரையிலான கௌரவ பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு கடைசியாக 1990-ல் விஜய்பட் சிங்கானியாவுக்கு ஏர் கமோடோர் கௌரவப் பதவி அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’