விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தமிழ் நாட்டின் விலுபுரம் மாவட்டத்தில் உள்ள புகையிரத தண்டவாளம் ஒன்றில் குண்டு வெடிக்க செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இக்குண்டு வெடிப்பு காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கான விஜயம் மேற்கொண்டமையை கண்டித்தே இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம் அப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இக்குண்டு வெடிப்பு காரணமாக சென்னைக்கான பல புகையிரத சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’