சட்ட விரோத கட்டிடங்களை அகற்றும் போது அது சட்ட விரோதமாக இருக்கக்கூடாது என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா தெரிவித்தார்.
ஹரிஸ்பத்துவ தொகுதியில் உள்ள அளவத்துகொட என்ற இடத்தில், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில்,"சட்ட விரோத கட்டிடங்களை அகற்றும் போது அது நாட்டின் நடைமுறைச் சட்டங்களுக்கு இசைவாக உள்ளவாறு அகற்றப்படுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நாட்டில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அணுகு முறை பின்வருமாறு உள்ளது. முதலில் சட்ட விரோத கட்டிடங்களை இனம் காண வேண்டும். பின்னர் அதுபற்றி உரியவருக்கு அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் அதனை அகற்ற அவருக்கு காலஅவகாசம் கொடுக்க வேண்டும்.
அப்படி அவர் அதை அகற்றாத பட்சத்தில் மட்டுமே உரிய அதிகாரிகள் சகிதம் அதனை அகற்ற முடியும். எதிர்காலத்தில் இந்த நடைமுறை பின்பற்றபடும்" என்றார்.
கடந்த காலங்களில் இருந்த எதிர்க்கட்சி பலமிக்கதாக இருக்கவில்லை. ஆனால் பலம்மிக்க அங்கத்தவர்கள் பலர் இருந்தனர். இதன்காரமாக பலமுள்ள பலர் கட்சியை விட்டு வெளியேறினர்.
அப்படி வெளியேறியவர்கள் ஜனாதிபதியுடன் பேசி இணக்கத்தின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்து அவரது கரத்தைப் பலப்படுத்தினர். இதன் காரணமாக இன்று அரசும் பலமாக உள்ளது. அங்கத்தவர்களும், அமைச்சர்களும் பலமாக உள்ளனர். இதுவே நாட்டின் பலம்" என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’