வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 ஜூன், 2010

வவுனியா பாடசாலையின் புனரமைப்புக்கு இந்திய நடிகர் விவேக் ஓப்ராய் நிதியுதவி

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக இந்திய நடிகர் விவேக் ஓப்ராய் தனது பெற்றோருடன் தற்போது வவுனியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
வவுனியா, மாறாய் இலுப்பை பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் புனரமைப்புப் பணிகளுக்காக விவேக் ஓப்ராய் நிதி உதவி செய்யவுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அப்பகுதியின் நிலைமைகளைக் கண்டறிவதற்காகவுமே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களுடன் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவும் கலந்துகொண்டுள்ளார் என்று அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விஜயத்தில் கலந்துகொண்ட நடிகர், பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கும் வவுனியா அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் இடையில் தற்போது வவுனியா கச்சேரியில் கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’