வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 ஜூன், 2010

ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது சந்திப்பில் ஜனாதிபதி - கூட்டமைப்பினர்

ஏழாவது புதிய நாடாளுமன்றம் நிறுவப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று மாலை முதன் முறையாக சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14பேரும் கலந்துகொள்வதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கூறினார்.
இன்றைய சந்திப்புக்கு முன்னோடியாக நேற்று மாலை இடம்பெற்ற கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.
இதன்போதே கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்வதான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அரியநேந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான இந்த சந்திப்பின் போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது என்றும் அவர் சொன்னார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’