நாட்டிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளைப் பாதுகாப்பானதாக மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரதி அமைச்சர் ரோகன திசாநாயக்கா தெரிவித்தார்.
நாட்டிலுள்ள சுமார் 900 ரயில் கடவைகளில் 200 மட்டுமே பாதுகாப்பாக உள்ளன. ஏனைய சுமார் 700 கடவைகள் பதுகாப்பற்றவை என்றும் அவர் தெரிவித்தார்.பிரதான பாதைகளுடன் தொடர்புடைய கடவைகள் மட்டுமே அனேகமாகப் பாதுகாப்பானவையாக உள்ளன என்றும் அவர் கூறினார்.
இதுவிடயமாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.



 
  













 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’