ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவது என்பது இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பது போலாகும். எனவே நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கை அரசாங்கத்திடம் 15 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. .அவற்றை ஏற்றுச் செயற்பட்டாலே வரிச்சலுகை வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாம் இதற்கு இணங்கினால், எமது இறைமையை நாம் விட்டுக்கொடுக்கும் செயலாகி விடும்.
எனினும் நிபந்தனைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்" என்றார்.
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அவசரகால சட்டத்தை நீக்குதல், அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல் , மனித உரிமை மீறல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறின், சம்பந்தப்பட்டோரை சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்துதல் உள்ளிட்ட 15 முக்கிய நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தின் மீது விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’