வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 ஜூன், 2010

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் உட்பட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினர்.


சீன அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அமைச்சர் டிலான் பெரேரா தலைமையில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் உட்பட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சீனாவிற்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து இன்று அதிகாலை நாடு திரும்பினார்கள். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா சில்வேஸ்திரி அலன்டின் உதயன் எஸ்.ஜீ.எம்.காரியவசம் எச்.ஏ.டபிள்யு.குணசேகர பி.வை.கமரலாகே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா எஸ்.ஏ.சேமசிங்க ராஜதுரை பெருமாள் எஸ்.பீ.கே.விதானலாகே ஈ.ஆர்.ஆர்.எம்.வீரவர்த்தன ஆகிய பத்துப் பேரே சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டவர்களாவர்.

சுமார் பத்து நாட்கள் பயணமாக சீனா சென்ற இக்குழுவிற்கு அமைச்சர் டிலான் பெரேரா தலைமை தாங்கியதுடன் சீனாவின் அமைச்சர்கள் அமைச்சு செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதுடன் பல்வேறு சந்திப்புகளிலும் பங்குகொண்டிருந்தனர். சீனாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் விவசாயம் கல்வி சுற்றுலாத்துறை மற்றும் விவசாயம் தொடர்பாக தத்தமது நாடுகளின் செயற்பாடுகளை இரு நாடுகளினதும் அரசியல் முக்கியஸ்தர்கள் பகிர்ந்து கொண்டதுடன் சீனாவில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் இலங்கைப்பிரதிநிதிகள் அறிந்துகொண்டுள்ளனர்.

சீனாவிற்கான தமது பயணத்தின் சிறப்பம்சமாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவருக்கு விஜயம் செய்து பார்வையிட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’