மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இந்திய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌவ்வான் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நீர்வள முகாமைத்துவ அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் ஏற்பாட்டில் இங்கு வந்துள்ள இவ்வுயர்மட்டக் குழுவினர் நேற்று மாலை அனுராதபுரத்தின் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று மதத்தலைவர்களை சந்தித்துள்ளனர். இவர்களின் விஜயத்தை அடுத்து இலங்கை இந்திய ஒப்பந்தம் வலிமையடையும் என மகோபோதி மாஹாநாயக்கர் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இந்த குழுவினர் இலங்கையில் பல்வேறு மத தலங்களுக்கும் சுற்றுலாக்களை மேற்கொள்ளவுள்ளனர். அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊவா மாகாண முதலைமைச்சர் சசீந்தர ராஜபக்ஷ உள்ளிட்ட பல உயர் பிரமுகர்களையும் அவர்கள் சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’