கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபை மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் பனம் தொழில்சார் அபிவிருத்திப் பணிகளைச் சிறப்பான முறையில் முன்னெடுக்கும் விதமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்தத் தலைமைப் பதவியினை எனக்கு வழங்கியுள்ளார். சுனாமியின் போதும் யுத்தத்தின் போதும் பெருமளவான பனைவளம் அழிந்து போயுள்ளது.
கடந்தகால யுத்தத்தினால் அழிந்து போன எமது தேசத்தைக் கட்டியெழுப்பவும் மக்களது வளமான வாழ்வைக் கட்டியெழுப்பவும் எதிர்காலத்தில் பனை அபிவிருத்திச் சபையும் இயன்றவரை உழைக்கும்.
எனவே இனிவரும் நாட்களில் சபையின் பணி நடவடிக்கைகளை சிறப்பான முறையில் முன்னெடுக்க சகல உத்தியோகஸ்தர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் பசுபதி சீவரத்தினம் கேட்டுக்கொண்டார்.
பனை அபிவிருத்திச் சபையின் ஆராய்ச்சித்துறை உதவி முகாமையாளர் அங்கு கருத்துத் தெரிவிக்கும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எதிர்கால நல்நோக்கத்தை நிறைவேற்றவும் புதிய தலைவரின் பணிநடவடிக்கைகளுக்கும் உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
சபையின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பசுபதி சீவரத்தினம் பத்திரத்தில் கையொப்பமிட்டுத் தனது பணி நடவடிக்கைகளை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து புதிய தலைவர் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடியதுடன் பனை அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா மற்றும் பனை அபிவிருத்திச்சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தப் பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவருக்கு யாழ்ப்பாணத்திருந்து தொலைபேசியூடாகத் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’