வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 12 ஜூன், 2010

கமல் வழியில் ஒத்திகை பார்ப்போம்! - கிளம்பிட்டார் சத்யராஜ்

கமல் சொல்வது போல இனி படப்பிடிப்புக்குப் போகும் முன் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒத்திகைப் பார்ப்பதுதான் படத்தை வெற்றியடைய வைக்கும் என்று கூறியுள்ளார் சத்யராஜ்.

சென்னையில் சமீபத்தில் இரண்டு முகம் என்ற படத்தின் அறிமுக விழாவில் பங்கேற்றார் சத்யராஜ். அரவிந்தராஜ் இயக்கும் படம் இது. விழாவில் சத்யராஜ் நிருபர்களிடம் பேசியது:
"ஒரு படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிப்பதற்கு முன்பு, நடிகர்-நடிகைகள் ஒத்திகை பார்க்க வேண்டும் என்று கமல்ஹாசன் சொன்னது, மிக நல்ல விஷயம்.
படத்தில் நடித்து முடித்து, அந்த படத்தை தியேட்டரில் பார்க்கும்போது, அடடா, இந்த காட்சியில் இப்படி நடித்து இருக்கலாமே... இந்த வசனத்தை இப்படி பேசியிருக்கலாமே... என்று எனக்குள் நானே பல முறை ஆதங்கப்பட்டுள்ளேன்.
'அமைதிப்படை' படத்திலேயே அது நடந்து இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல. எல்லா நடிகர்-நடிகைகளுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீட்டுக்குப்போய் வருத்தப்படுவதை விட, படப்பிடிப்புக்கு முன்பே ஒத்திகை பார்த்தால், பின்னால் வருத்தப்படுவதை தவிர்க்கலாம்...
நடிகர் - நடிகைகள் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள், ஸ்க்ரிப்ட் எழுதுபவர்கள் ஆகிய அனைவருமே ஒருமுறை ஒத்திகை பார்ப்பது நல்லது. ஒரு படத்துக்கு, குறைந்தபட்சம் ஒரு வாரம் ஒத்திகை பார்த்தால் போதும். படம் நன்றாக வரும். 4 வாரம் ஓடுகிற படம் 50 நாட்கள் ஓடும். 100 நாட்கள் ஓடுகிற படம், 25 வாரங்கள் ஓடும்...'', என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’