வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 13 ஜூன், 2010

நிகோபர் தீவுகளுக்கு அருகாமையில் பாரிய நில நடுக்கம் , சுனாமி எச்சரிக்கை




இந்தியா நிகோபர் தீவுக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ் நிலநடுக்கமானது 7.7 மக்னிரியூட் அளவினைக் கொண்டுள்ளதால் சுனாமி ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாகவும் எனவே கடற்கரையை அண்டிய பகுதியில் வாழும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நேரம் பசுபிக் சுனாமி அவதானிப்பு நிலையமும் இப்பாரிய நிலநடுக்கமானது சுனாமியை ஏற்படுத்தும் என வெளியிட்டுள்ளது.
இச்சுனாமியானது இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மியன்மார், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் ஏற்படலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது, இந்தியா நிகோபர் தீவுக்கு அண்மையில் இன்று இந்திய நேரப்படி இரவு 7:27 க்கு , 7.7 வடக்காகவும், 91.8 கிழக்காகவும் ஏற்பட்டதாகவும், 7.6 மக்னிரியூட் அளவில் அமைந்ததாகவும் இதனால் சுனாமி அறிகுறி மிகவும் காணப்படுவதாகவும், மேற்குறிப்பிட்ட நாடுகளின் கரையோரப்பகுதி மக்களை அவதானமாகவும் இருக்குமாறு அவதானிப்பு நிலையங்கள் கேட்டுக்கொள்கின்றன.
இவ்வேளையில் இலங்கை நேரம் அதிகாலை 1:00 மணியளவில் 1.1 மக்னிரியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இலங்கை அவதான மைய அதிகாரியான வசந்தன் தெரிவித்துள்ளார்.
இதனால், கொழும்பில் கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடிக்கட்டடங்களில் சிறிய அளவிலான நிலநடுக்கத்தினை உணர்ந்த மக்கள், கட்டிடங்களை விட்டு வீதியில் நின்றதாக கொழும்பு பகுதி மக்கள் தெரிவித்த போதிலும், மட்டக்களப்பிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இருப்பினும், இலங்கையில் சுனாமி ஏற்படாது என தற்போது சுனாமி அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது.
சுனாமி அலாரம் மூலம் சுனாமி பற்றி உடனுக்குடன் அறியலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’