தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை குறியீட்டு அடிப்படையில் ஏற்றுக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை வெனிசுலா அரசு நிராகரித்துள்ளதாக திவயின தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக ஜெசீகா சந்திரசேகரன் மற்றம் சாரதா நாதன் ஆகியோர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக திவயின பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்ல எடுத்த முயற்சியின் போது இவர்கள் இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடுதலைப் புலி ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் குறித்து கியூபாவிற்கான இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகம், வெனிசுலா வெளிவிவகார அமைச்சர் நிக்கலோஸ் மரோவிடம் விளக்கியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை படுகொலை செய்து வருவதாக இந்த புலி ஆதரவாளர்கள் வெனிசுலாவில் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெனிசுலாவில் நாடு கடந்த தமிழீழ இராச்சிய கிளை ஒன்றை நிறுவி அதன் மூலம் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலி செயற்பாடுகளை பரப்பும் முயற்சிகளை மேற்கொள்ள இவர்கள் உத்தேசித்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’