வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 ஜூன், 2010

கல்வியில் பின்தங்கும் கிழக்கு மாகாணம்

இலங்கையில் உலக வங்கியின் உதவியுடன் தேசிய கல்வி ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில், ஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணமே கடைசி நிலையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 9வது இடத்தையும், தமிழ் மொழிப் பாடத்தில் 5வது இடததையும் கிழக்கு மாகாணம் அடைந்துள்ளதாக தேசிய கல்வி அய்வு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
"கிழக்கு மாகாணத்தில் ஆசியரியர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டாலும், ஆரம்பக் கல்வியில் பயிற்சி பெற்றட ஆசிரியர்கள் பயன்படுத்தப்படாமையும் , பின்தங்கிய பிரதேசங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை போன்றவையுமே இந்நிலைக்கு பிரதான காரணங்கள்" என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கூறுகிறார்.
ஆரம்பக் கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவானது இடைநிலை கல்வி மற்றும் உயர்நிலை கல்வியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதற்கு தீர்வு காணும் வகையில் பாடசாலைகளில் அல்லது கல்வி வலயங்களில் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் வருடாந்த சமபள உயர்வை, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அடிப்படையில் வழங்கும் திட்டமொன்றை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் , இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் கல்வியை முன்னேற்றமடையச் செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’