யாழ். தினக்குரல் உதவி ஆசிரியர் செல்வரத்தினம் ரூபனின் நினைவஞ்சலிக் கூட்டம் இன்று சனிக்கிழமை யாழ் பலநோக்கக் கூட்டறவச்சங்க கேட்போர் கூடத்தில் யாழ் தினக்குரல் முகாமையாளர் ஆ.சி.நடராசா தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் நினைவுச்சுடரை யாழ்ப்பாணம் காசநோய் வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் சி.ஜமுனாநந்தன் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக கலைப் பீட பேராசிரியர் வி.பி.சிவநாதன் மற்றும் ஊடகவியலாளர்கள் ஏற்றி வைத்தார்கள்.
தொடர்ந்து இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணம் காசநோய் வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் சி.ஜமுனாநந்தன் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக கலைப் பீட பேராசிரியர் வி.பி.சிவநாதன், ஊடகவியலாளர்கள் சார்பில் சுயாதீன ஊடகவியலாளாகளான தயாபரன் நேசன் உதயன் பத்திரிகையின் உதவி ஆசிரியர் தேவராசா மற்றும் வலம்புரியின் உதவி ஆசிரியர் சஜீவன் உட்பட பலர் உரையாற்றினார்கள்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’