கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நான் மாறினால் நாடு மாறும் என்ற தலைப்பின் கீழ் இந்த நாடகப் போட்டிகள் வலயம் மற்றும் மாகாண மட்டங்களில் ஏற்கனவே நடத்தப்பட்டிருந்தன. தீவகக் கல்வி வலயத்தில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட இந்நாடகம் முதலாமிடத்தையும், மாகாண மட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்றிருந்தது.
இந்நாடகம் கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கொழும்பு இல்லத்தில் நெடுந்தீவு மகாவித்தியாலய அதிபர் திருமதி சாரதா கிருஸ்ணதாசன் மற்றும் ஆசிரியர்கள் நாடகத்தில் பங்கெடுத்த மாணவர்கள் அனைவரும் அமைச்சர் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன் போது அமைச்சர் அவர்கள் பாடசாலைச் சமூகத்திற்குத் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டார்.
நான் மாறினால் நாடு மாறும் என்ற இந்த அரங்காற்றுகை நாட்டின் வளங்கள் மற்றும் அபிவிருத்தியை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டதாகும். தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றி இருந்தமை தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் எதிர்காலத்திலும் இவ்வாறான போட்டிகளில் பங்குபற்ற தமது பாடசாலை விரும்புவதாகவும் பாடசாலை அதிபர் சுட்டிக்காட்டினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’