வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 20 ஜூன், 2010

ஜெயலலிதாவின் அறிக்கைக்கு எதிராக தமிழக முதல்வர் மு. கருணாநிதி பதில்

இலங்கைத் தமிழ் மக்களின் அவலத்தைப் போக்க முடியாதவர்கள் இன்று வெறும் அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, இலங்கை தமிழர்க்கு நீதி பெற்றுத்தரும் பொறுப்பு செம்மொழி மாநாட்டினை நடத்துபவர்களுக்கு உண்டு என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அவரது அந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி பதில் அறிக்கையொன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையிலேயே கலைஞர் மேற்கன்டவாறு கூறியுள்ளார்.
தமிழர்கள் என்ற வகையில் செம்மொழி மாநாட்டை நடத்துவதம் மூலம் அந்த மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக பங்களிப்பு செய்கின்றவர்கள் நாம்தான் என்றும் தமிழர்களின் ஒற்றுமைக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என்றும் கருணாநிதி தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 18 அம்சத்திட்டம் ஒன்றை பரிந்துரை செய்திருக்கும் ஜெயலலிதா, இத்திட்டத்தை நிறைவேற்றிய பின்னரே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படவேண்டுமென்றும் அறிக்கையொன்றின் மூலம் கூறியுள்ளார்.

1. இலங்கை வடபகுதி முகாம்களில் இன்னும் ஒரு இலட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

2. மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்துதரப்படவேண்டும்.

3. அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்படவேண்டும்.

4. அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரிசெய்யப்படவேண்டும்.

5. மக்களுக்குக் கல்வி கொடுக்கப்படவேண்டும்.

6. கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படவேண்டும்.

7. புதிய பள்ளிகள் கட்டப்படவேண்டும்.

8. பழைய பள்ளிகள் புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டும்.

9. போரினால் கணவனை இழந்த விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படவேண்டும்.

10. போரினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் ஆலோசனை தரப்படவேண்டும்.

11. கோயில்கள் , தேவாலயங்கள், மசூதிகள் புனர்நிர்மாணம் செய்துதரப்படவேண்டும்.

12. கோயில்கள் , தேவாலயங்கள், புத்த மடாலயங்களாக மாற்றப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

13. போரில் ஊனமுற்றவர்களுக்கு சிகிச்சையும் மறுவாழ்வும் தரவேண்டும்.

14. ஆண்கள் குறைந்துவிட்டால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மனரீதியான அழுத்தம் போக்கப்படவேண்டும்.

15. பெண்களே நடத்தும் தொழிற்கூடங்கள் உருவாக்கப்படவேண்டும்.

16. வருகின்ற அனைத்து நிவாரண உதவிகளும் தமிழ்மக்களுக்கு சரியான முறையில் சென்றடையவேண்டும்.

17. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்படவேண்டும்.

18. பத்திரிகையாளர்கள் தமிழர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவேண்டும்.

இந்த 18 அம்சக் கோரிக்கைகளும் நிறைவேற்றிய பின்னர் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படவேண்டுமென்று தமிழ் உலகமே எதிர்பார்க்கிறது.
சுருக்கமாகக் கூறினால் தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும் சுயமரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்படவேண்டும் என்றும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’