வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 13 ஜூன், 2010

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு:சிறுவர் பாதுகாப்பு திணைக்களம்

நாட்டில் தொடர்ந்தும் சிறுவர்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சிறுவர்கள் பாதகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.


சிறுவர்களை துன்புறுத்துதல் தொடர்பில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆயிரத்து 500 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கும் சிறுவர்கள் தொடர்பில் தகவல்கள் வழங்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 1929 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக இன்னல்களை எதிர்நோக்கும் சிறுவர்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல்கள் வழங்க முடியும்.
அத்துடன், இந்த விசேட தொலைபேசி மூலமாக பெறப்படும் முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவென இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கென 25 மாவட்டங்களில் 50 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னல்களை எதிர்நோக்கும் சிறுவர்கள் தொடர்பில் குறித்த அதிகாரிகளினூடாக வாரந்தம் அறிக்கை தமக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’