வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 ஜூன், 2010

கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சேவாலங்கா நிறுவனத்தால் பூநகரி கரியாலை நாகபடுவான் கிராம மக்களுக்கு விவசாய உபகரணங்கள் கையளிப்பு!

இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதன் மூலம் உச்ச பயன்பாட்டை பெறும் முறையிலான ஒழுங்கமைப்புக்களை கிராம மட்ட மக்கள் நிறுவனங்கள் ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் கேட்டுக் கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

இன்றைய தினம் கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சேவாலங்கா நிறுவனத்தால் பூநகரி கரியாலை நாகபடுவான் கிராம மக்களுக்கு ஐந்து இரு சக்கர உழவுயந்திரம், ஒரு தொகுதி நீர் இறைக்கும் இயந்திரங்கள் தெளி கருவிகள் என்பவற்றை வழங்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மக்கள் தமக்கு கிடைக்கும் உதவிகளில் இருந்து உச்சப் பயன்பாட்டை பெற்றுக் கொள்ள கூடியதாக கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மீள் குடியேற்றத்தில் அரசுடன் இணைந்து சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் உள்ளூர் தொண்டர் நிறுவனங்கள் செயற்பட வேண்டியது அவசியமானது. இதனை நாம் அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கரியாலை நாகபடுவான் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பூநகரிப் பிரதேச செயலர் சேவாலங்கா நிறுவன உதவித் திட்டமிடல் அதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’