வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 29 ஜூன், 2010

ஈழ குழந்தைகள் நலனுக்காக ஆஸியில் 'வைரத்தில் முத்துக்கள்' _

இலங்கையில் வாழும் தமிழ் குழந்தைகளின் நல நிதிக்காக ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் கவிஞர் வைரமுத்துவின் செம்மொழி தமிழ் பாடல்கள் அடங்கிய 'வைரத்தில் முத்துக்கள்' எனும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.



சுமார் 7 ஆயிரம் திரைப்படப் பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். அவற்றில் ஆங்கிலச் சொல் கலவாத, செம்மொழிப் பாடல்கள் மட்டும் இடம் பெறும் மாபெரும் கலை நிகழ்ச்சியை ஆஸ்திரேலியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'வைரத்தில் முத்துகள்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கலை நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பங்கேற்கிறார்.
மேலும், நடிகர் விவேக், பின்னணி பாடகர்கள் மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, சுவேதா மேனன் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கின்றனர். செம்மொழிப் பாடல்கள் பிறந்த பின்னணியை கவிஞர் வைரமுத்து விவரிக்க, அதைத் தொடர்ந்து பாடல் பாடப்படும். அவருடைய முதல் பாடலான 'பொன்மாலைப் பொழுது' பாடல் முதல் 'உசுரே போகுதே' பாடல் வரை 40 பாடல்கள் பாடப்படுகின்றன.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஜூலை 3ஆந் திகதி மாலை 7.00 மணிக்கும், மெல்போர்ன் நகரில் ஜூலை 4 ஆந் திகதி மாலை 6.00 மணிக்கும் இந்த கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது .
இந்தக் கலை நிகழ்ச்சியில், 'வைரமுத்துவின் ரசிகை' என்ற குறு நாடகத்தை நடிகர் விவேக் குழுவினர் நடித்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆஸ்திரேலியாவில் உள்ள சரிந்தா அறக்கட்டளை சார்பாக ஏ.வி.மோகன் ஏற்பாடு செய்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த சாய் சக்தி மகாராஜன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்.
இலங்கையில் வாழும் தமிழ்க் குழந்தைகளின் நல நிதிக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக, நாளை 30ஆந் திகதி தனது குழுவினரோடு வைரமுத்து ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுகிறார். அடுத்த மாதம் 8 ஆந் திகதி சென்னை திரும்புகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’