வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 ஜூன், 2010

சீன அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் உட்பட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனா பயணம்.

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப்பேர் இன்றையதினம் சீனாவிற்கு பயணமாகின்றனர்.
சுமார் பத்து நாட்கள் பயணமாக சீனா செல்லும் இக்குழுவிற்கு அமைச்சர் டிலான் பெரேரா தலைமை தாங்குகின்றார். இக்குழுவில் யாழ். மாவட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் அவர்களும் சீனா பயணம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் விவசாயம் கல்வி சுற்றுலாத்துறை மற்றும் விவசாயம் தொடர்பாக தத்தமது நாடுகளின் செயற்பாடுகளை பகிர்ந்து கொள்வதுடன் சீனாவில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் அறிந்துகொள்ளவுள்ளனர்.
சீனாவிற்கான தமது பயணத்தின் சிறப்பம்சமாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவருக்கு விஜயம் செய்து பார்வையிடவுள்ளமையும் விசேட அம்சமாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’