தொலைபேசிப் பாவனையாளர்கள், இவ்வருடத்தில் மட்டும் குறைந்தது 15 பேர், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கையடக்கத் தொலைபேசியினால் சம்பவிக்கும் மரணங்கள் அதிகரித்து வருவதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்."கடந்த ஆறு மாத காலங்களில், 15 பேர் தண்டவாளப் பாதை வழியாக கையடக்கத் தொலைபேசியில் கதைத்துக் கொண்டு சென்ற வேளை, ரயில் வரும் சத்தத்தைச் செவிமடுக்கத் தவறியதால், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்" என அவர் ஏ.எப்.பி. செய்தி ஸ்தபனத்திற்கு தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை, கையடக்கத் தொலைபேசியில், வெளிநாட்டில் கல்வி கற்கும் தமது மகளுடன் பேசியவாறு சென்று கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் ரயிலில் மோதி மரணமானார் என்றும் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.
2009 காலப் பகுதியில், கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர் ஐவர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் 20 மில்லியன் சனத்தொகையில், 14 மில். பேர் கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’