பயங்கரவாதம், கடத்தல்கள் ஆகியவற்றிற்கு எதிராக போராடுவது தொடர்பில் சார்க் வலய நாடுகள் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளன.
பாகிஸ்தானின் இஸ்லாமாத் நகரில் சார்க் வலய நாடுகளினது உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன்போதே, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அத்துடன், பிராந்தியங்களுக்கு இடையினான பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தல், பயங்கரவாதத்தை தோற்கடித்தல் ஆகியன தொடர்பிலும் சார்க் உள்துறை அமைச்சர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி சார்க் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரச முகாமைத்துவம் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் உரையாற்றுகையில், பயங்கரவாத நடவடிக்கையால் பிராந்தியங்களுக்கிடையிலான ஒற்றுமை சீர்குலைந்திருப்பதுடன், பொருளாதார பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’