இந்த விடயம் தொடர்பில் அவர்களை இலங்கைக்குள் அனுமதிப்பதில்லை என்கிற தமது நிலை மிகத் தெளிவாக இருக்கின்றது என இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் கூறியுள்ளார்.
இலங்கையில் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த போரின் இறுதி கட்டத்தின் போது இடம்பெற்றதாக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்து தமது ஆலோசனை வழங்க இந்த ஆலோசனைக் குழுவை ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலர் பான் கீ மூன் கடந்த செவ்வாய்கிழமை அறிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் அந்தக் குழுவினர் ஐ நா வின் தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்குவர்.
இலங்கை அரசு தமது தரப்பிலிருந்து ஒரு விசாரணையை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், ஐ நா வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவானது தமது நாட்டின் உள் விவகாரங்களில் முகாந்திரமில்லாத ஒரு தேவையற்ற தலையீடு என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’