-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
புதன், 16 ஜூன், 2010
இனிப்பு பண்டத்தை உட்கொண்டதால் இலட்சக்கணக்கான பணத்தை இழந்த இளைஞர்கள்
ஒடிக்கொண்டிருந்த பஸ்ஸில் இடைநடுவில் அறிமுகமான நண்பர் ஒருவர் வழங்கிய இனிப்பு பண்டத்தை உட்கொண்டு மயக்கமடைந்த இளைஞர்கள் இருவரிடமிருந்து இலட்சக்கணக்கான பணமும் பெறுமதியான பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது
.
கொழும்பிலிருந்து கம்பளை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்ஸிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
கம்பளைக்கு பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அருகிலிருந்த இளைஞர்களிடம் நண்பராக அறிமுகம் செய்து கொண்டதுடன் தான் வைத்திருந்த டொபியையும் இருவருக்கும் வழங்கியுள்ளார்.
புதிய நண்பன் டொபியில் தானும் ஒன்றை உட்கொண்டமையினால் எவ்விதமான சந்தேகத்தையும் கொள்ளாத இளைஞர்கள் இருவரும் டொபியை உட்கொண்டனர். சிறுநேரத்தில் இளைஞர்கள் இருவரும் மயக்கமடைந்தனர்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த இளைஞன் மயக்கான இளைஞர்களிடமிருந்த ஒருஇலட்சத்து ஆயிரம் ரூபா பொறுமதியான தொலைபேசி மற்றும் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு இலகுவில் இறங்கி தலைமறைவாகியுள்ளார்.
மயக்கமடைந்த இளைஞரும் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’