விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் பெற்ற வெற்றி சாதாரணமானதல்ல, என்று ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முக்கிய பிரதிநிதியான சமந்தா பவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவைச் சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது, இலங்கையில் போருக்கு பின்னரான நிலை தொடர்பான முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கலந்துரையாடலின் போது, இறுதிப்போரில் வென்ற ராஜபக்சே அரசுக்கு ஒபாமா நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது. 'பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக' ஒபாமாவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதற்கு நன்றி தெரிவித்து கொண்ட அதிபர் ராஜபக்சே அமெரிக்கா உடனான உறவை மேம்படுத்தி கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
சொன்னது என்னாச்சு?
இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததுள்ளதாகக் கூறி, அதற்கு ஆதாரமாக சேட்டிலைட் படங்களை வெளியிட்டது அமெரிக்கா. இலங்கையின் போர்க் குற்றம் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கடந்த ஓராண்டு காலமாக வலியுறுத்தியும் வந்தது.
அப்போதெல்லாம், அமெரிக்காவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தனர் ராஜபக்சேவும் அவரது தம்பிகள் உள்ளிட்ட அமைச்சரவையும்.
இப்போது, புலிகளுக்கு எதிரான போரை ராஜபக்சே நடத்திய விதம் குறித்து திருப்தியும் பாராட்டும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி அமெரிக்கத் தரப்பிலிருந்து இலங்கையின் போர்க்குற்றம் குறித்து எந்த கேள்வியும் எழுப்பப்படாது என்பதற்கான சிக்னல்தான் இந்த சந்திப்பு என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’