வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 ஜூன், 2010

பாலியல் துஷ்பிரயோகம் எனப் புகார்


கொழும்பு ஆடைத்தொழிற்சாலைகளில் இலங்கை அரசாங்கத்தால் பணிக்கு சேர்த்துவிடப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பாலியல் துஷ்பிரயோக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இது குறித்து தமிழோசையிடம் பேசிய ஸ்ரீதரன் அவர்கள், மறுவாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆடைத்தொழிற்சாலை பணிகளுக்காக அரசாங்கத்தினால் பயிற்சி வழங்கப்பட்டு, கொழும்பில் பணிக்கு சேர்க்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளே தமது பெற்றோரின் ஊடாக இது குறித்து முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஆடைத் தொழிற்சாலைகளில் இருப்பதை விட முன்னர் இருந்த மறுவாழ்வு நிலையங்களுக்கோ, சிறைக்கோ திரும்ப தாம் தயாராக இருப்பதாகவும் அந்த போராளிகள் கூறியுள்ளதாக சிறிதரன் தெரிவித்தார்.
அரசு மறுப்பு
அமைச்சர் டியூ குணசேகர
அமைச்சர் டியூ குணசேகர
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளது போல எந்தச் செய்தியும் தமது பார்வைக்கு வரவில்லை என இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்த்திருத்த்ததுறை அமைச்சர் டியூ குணசேகர தமிழோசையிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக தான் நாடாளுமன்றத்தில் இருந்த போதிலும், ஸ்ரீதரன் தன்னிடம் இது குறித்து ஏதும் தெரிவிக்காமால், வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது ஒரு இடைச் செய்தியாகவே இதைத் தெரிவித்தார் எனவும் அவர் கூறுகிறார்.
எனினும் தற்போது இந்த விடயம் தமிழோசை மூலம் தனது பார்வைக்கு வந்துள்ள நிலையில், இது குறித்து தான் விசாரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றபடி பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள், முன்னாள் போராளிகள் ஆகியோரை விடுவிப்பது தொடர்பில், நீதித்துறை, சட்டமா அதிபர், காவல்துறையினர் ஆகியோரே முடிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் டியூ குணசேகர கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து தான் ஒரு அறிக்கையை கோரியுள்ளதாகவும், அது கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் விவாதிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறுகிறார்.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’