ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் விரைவில் முன்வைக்கவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கவேண்டும் என்பதுடன் தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கும் ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். எதிர்வரும் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது
அரசாங்கம் விரைவில் சமர்ப்பிக்கவுள்ள இவ்வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களுடன் இருக்கின்றனர். எனவே மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். முக்கியமாக வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுவருகின்றது. அரசாங்கம் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றியாக வேண்டும்.
இதேவேளை தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்துகின்றது. தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவது தொடர்பில் வரவு செலவுத்திட்டத்தின் ஊடõக யோசனைகளை முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். வாழ்க்கைச் செலவு உயர்வானது அனைத்து மட்ட மக்களையும் பாதித்துள்ளது. எனவே வாழ்க்கையை செலவு சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’