வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 ஜூன், 2010

வெலிகந்தை புனர்வாழ்வு நிலையம் செல்ல உறவினர்களுக்கு இலவச பஸ் சேவை

பொலன்னறுவை வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்திலுள்ள இளைஞர்களை அவர்களின் உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கான பயணச் செலவை வவுனியா மாவட்ட மனித உரிமைகள் இல்லம் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், பிரதி சனிக்கிழமை தோறும் வவுனியா வைரவர்புளியங்குளம் அலுவலகத்திலிருந்து காலை 6 மணிக்கு வெலிகந்தை நோக்கி பஸ்ஸொன்று பயணிக்கவுள்ளதாக மனித உரிமைகள் இல்ல இணைப்பாளர் பெரின் சேவியர் தெரிவித்தார்.
இதனால், குறித்த இளைஞர்களைப் பார்வையிடுவதற்காகச் செல்லும் அவர்களது உறவினர்கள் முன்கூட்டியே தமக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’