வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 26 ஜூன், 2010

சிகிரியா புனரமைப்புப் பணிகளை இடைநிறுத்த உத்தரவு

சிகிரியாக் குன்று வளாகத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்துப் புனரமைப்பு பணிகளையும் உடனடியாக இடைநிறுத்துமாறு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

சிகிரியாக் குன்று வளாகத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைப்புப் பணிகளுக்குப் பிரதேசவாசிகளிடமிருந்து எழுந்துள்ள எதிர்ப்பையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் செனரத் திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்தப் புனரமைப்புப் பணிளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அண்மையில் மூவர் சிகிரியாக் குன்றின் அடிவாரத்தில் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்த போது, சிகிரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், உயர்கல்வி பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க மற்றும் தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சிகிரியா குன்றுப் பகுதிக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’