உலகப் புகழ் பெற்ற பொப் இசைப் பாடகர் மைக்கல்ஜெக்ஸன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25ஆந் திகதி திடீரென மரணமடைந்தார்.
மைக்கல் ஜெக்ஸன் மரணம் அடைந்து இன்று ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி உலகம் முழுவதுமுள்ள பொப் இசை ரசிகர்கள் மைக்கல் ஜெக்ஸனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பல நகரங்களில் அவரை நினைவுகூரும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மைக்கல் ஜெக்ஸனின் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
அவரைக் கௌரவிக்கும் வகையில், மெழுகுப் பொம்மைகள் அமைப்பதில் உலகப்புகழ் பெற்ற மேடம் தவுசட் அருங்காட்சியக அமைப்பு மும்முரமாக ஈடுபட்டது. உலகம் முழுவதும் 9 இடங்களில் மைக்கல் ஜெக்ஸன் மெழுகுப் பொம்மைகளை அது வைத்துள்ளது.
மெழுகு பொம்மைக் கண்காட்சியைப் பார்க்க மக்கள் திரண்டு வந்தவண்ணமுள்ளனர்.
மெழுகு பொம்மை கண்காட்சி அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’