வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 ஜூன், 2010

ஜெனரல் சரத்தை இராணுவ வாகனத்தில் அழைத்து வருமாறு நீதிமன்றம் உத்தரவு

ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தனியான இராணுவ வாகனம் ஒன்றில் நீதிமன்றுக்கு அழைத்து வருமாறும் இன்று போல் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வர வேண்டாமென்றும் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நீதிமன்றம் சரத்துக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட்ட பின்னரும் அவர் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்படுவதாகவும் தனிப்பட்ட வாகனத்தில் அவர் அழைத்து வரப்படுவதில்லை என்றும் சட்டத்தரணி இன்று நீதிபதியிடம் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .
அத்துடன் சரத்தின் உடல்நலன் கருதி, அவரது குடும்பத்தினரே உணவு கொண்டுவந்து தர அனுமதிக்குமாறும் சிறைச்சாலை உணவை வழங்க வேண்டாமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .ஐகோப் ஆயுத கொள்வனவு மோசடி விவகாரத்தின் மூன்றாவது சந்தேக நபரான ஜெனரல் பொன்சேகாவை, எதிர்வரும் 12ஆம் திகதிவரை இராணுவ விளக்கமறியலில் வைக்குமாறும் கோட்டை நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், சிறை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் அவரை வைக்குமாறும் கோட்டை நீதிவான் லங்கா ஜெயரட்ன தெரிவித்துள்ளார். .
ஐகோப் ஆயுத கொள்வனவு மோசடி வழக்கு தொடர்பான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இடம்பெறுமென கோட்டை நீதவான் நீதிமன்றில் தலைமைச் சட்ட அதிகாரி முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’