இறுதிக்கட்ட யுத்தம் கடந்த வருடம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தபோதிலும், அதற்கான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு காலம் எடுக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியிலேயே, அவர் இதனைக் கூறினார்.
இந்நிலையில், உடனடியானதொரு அரசியல்த் தீர்வை முன்வைக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசியல்த் தீர்வை முன்வைப்பதற்கு போதியளவான கால அவகாசம் தங்களுக்கு பிடிக்கும் எனக் கூறிய அவர், எனினும், உடனடியான அரசியல்த் தீர்வொன்றை முன்வைக்குமாறு உங்களால் கோரமுடியாது எனவும் தெரிவித்தார்.
அரசியலமைப்பானது வாரத்திற்கோ அல்லது மாதத்திற்கோ வெளியாகும் சஞ்சிகையை போன்றது அல்ல என்பதுடன், தங்களால் அடிக்கடி அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
எனவே, அரசியல்த் தீர்வை முன்வைப்பதற்கு போதியளவு கால அவகாசம் பிடிக்கும் எனவும் மேலும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’