வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 ஜூன், 2010

புலிகளின் வீடியோக் காட்சிகளை போனில் வைத்திருந்தவர் வவுனியாவில் கைது

வவுனியா, பாவற்குடாச் சேனைப் பிர தேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதர வான காட்சிகள் அடங்கிய வீடியோப் படங்களை கையடக்கத் தொலைபேசி யில் வைத்திருந்த ஒருவர் அதிரடிப்படை யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் செயற்பாடு கள் பற்றிய காட்சிகள், புகைப்படங்கள், பாடல்கள் என்பன அந்தக் கையடக்கத் தொலைபேசியில் இருந்தன எனவும் சந்தேக நபரை அதிரடிப்படையின் விசேடக் குழுவொன்று கைதுசெய்திருக்கிறது எனவும் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியாப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு விடுதலைப் புலிகளின் வீடியோக் காட்சிகளை தமது கையடக்கத் தொலைபேசிகளில் வைத்திருந்த நான்கு பேர் அண்மையில் கிழக்கு மாகாணத்தில் அதிரடிப்படையினரால் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’