வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 ஜூன், 2010

புதுடில்லியில் காந்தி சமாதிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியார் ஷிராந்தியும் இன்று, ராஜ்கொட்டிலுள்ள மகாத்மா காந்தி சமாதிக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார்.
காந்தியின் பொன்மொழிகள் அடங்கிய நினைவுச் சுருள் ஒன்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
நேற்றைய தினம் புதுடில்லி சென்றடைந்த ஜனாதிபதிக்குப் பல அரசியல் தலைவர்கள், விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளித்தனர்.
இன்று அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் அவரை வரவேற்றனர். இராணுவ அணி வகுப்பு மரியாதையும் நடந்தது. அதை ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து மன்மோகன்சிங் - ராஜபக்ஷ சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதி மாளிகையிலேயே நடந்த இந்த நிகழ்ச்சியில் பொருளாதார ஒப்பந்தம் உள்ளிட்ட சில ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர். பின்னர் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’