வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 ஜூன், 2010

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்மாடி வீடுகளை நிறுவ புலிகள் முயற்சி

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் புலிகள் இயக்கத்தினர் தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று (08) பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.
புலிகளின் அனுதாபிகளான தமிழர்களுக்காக இந்த வீடுகளை நிர்மாணிக்க புலிகள் முதலீடு களைச் செய்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சமர்ப்பித்துப் பிரதமர் உரையாற்றினார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 இற்குச் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வழமை யான நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தைச் சமர்ப்பித்த பிரதமர், அவசர காலச் சட்டம் தொடர்பான பிரேரணையையும் சமர்ப்பித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ஜயரட்ன, கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் தொடர்மாடிக் குடியிருப்புகளை நிர்மாணித்து புலிகள் மீள ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களைத் தேடிக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இறுதி யுத்தம் நடைபெற்ற போது புலிகள் இயக்க உறுப்பினர்கள் மக்களுடன் மக்களாகக் கலந்துள்ளதாகவும் தற்பொழுது தென் பகுதியில் தங்கியிருக்கும் அவர்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறிய பிரதமர், ஏற்கனவே, கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய 71 பேர் கடந்த மே மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் மேலும் பலரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் நாடு கடந்த தமிbழ அரசை’ நிறுவ வாக்கெடுப்புகளை நடத்தியிருக்கிறார்களென்று சுட்டிக்காட்டிய பிரதமர் இவ்வாறான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கும் புலிகளின் செயற்பாடுகளை முற்றாகத் தடுப்பதற்கும் அவசர காலச் சட்டத்தை நீடிக்க வேண்டியிருப்பதாகவும் பிரதமர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’