வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 20 ஜூன், 2010

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் தமிழ் தினப் போட்டியின் ஆரம்ப விழா!


தமிழ் தினப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் நாலா பகுதிகளிலிருந்தும் வருகை தந்துள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என  இன்று (19) வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டியின் ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் திரு முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) 
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் இதுவரை காலமும் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்குக் கிழக்குக்கு வெளியே நிகழ்ந்த தமிழ் தினப் போட்டிகள் தற்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதால் யாழ். மண் பெருமையடைகின்றது எனவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இங்கு வருகை தந்துள்ளதும் இம்மாணவர்கள் தமிழின் பெருமையை பறைசார்த்துவதையும் மகிழ்வுடன் வரவேற்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் இந்த போட்டியில் வெற்றியீட்டுபவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத் தேர்வின் போது விஷேட புள்ளிகள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இத்தகைய போட்டிகளின் மூலம் சகல மாணவர்கள் மத்தியிலும் அவர்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பாக அமையுமென்பதுடன் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் மாவட்ட மக்களும் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதனையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் அந்த மாணவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
கல்வியமைச்சின் தமிழ் பிரிவுப் பணிப்பாளர் வீ.எஸ். இதயராசாவின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கல்வி அமைச்சின் மொழியும் அதன் கலாசாரத்திற்குமான பணிப்பாளர் தயா பண்டார கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட பெருமளவிலான மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.












0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’