இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரான ஜே.எஸ். திஸ்ஸநாயகம் அமெரிவிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பான சீ.பி.ஜே (CPJ) அறிவித்துள்ளது.
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு, வொஷிங்டன் டுலஸ் சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும்,தமது விடுதலைக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக திஸ்ஸநாயகம் கூறியுள்ளதாக சீ.பி.ஜே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஜொயல் சிமோன் தெரிவித்துள்ளார்.
இன உணர்வுகளை தூண்டும் வகையிலான ஆக்கங்களை பிரசூரித்த குற்றத்திற்காக ஊடகவிலயாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு அரசாங்கம் 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்தது. பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, திஸ்ஸ நாயகத்திற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’