உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீனப் பதில் பிரதமர் சியாங் டிஜியாங் பிரதமர் டி.எம்.ஜயவர்த்தனவை நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது குறித்த 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன எனப் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை - சீனா இடையிலான பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு, அம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கான உதவி, தென் மாகாணத்தில் அதிவேக பாதை அமைத்தல், தொழிநுட்ப ரீதியிலான ஒத்துழைப்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கான உதவி வழங்குதல் உள்ளிட்ட மேலும் சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ஒருமைப்பாடு, ஏற்றுமதி மற்றும் விமான சேவை என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இவை முறித்து இரு நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்திய விஜயத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ - சீனப் பதில் பிரதமர் இடையே இன்று நட்புறவுக் கலந்துரையாடல் இடம்பெறுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’