வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 12 ஜூன், 2010

வவுனியாவில் 53 புலிப் போராளி ஜோடிகளுக்கு நாளை திருமணம் : பிரி, ரணசிங்க

முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளில் 53 ஜோடிகளுக்கு நாளை வவுனியாவில் திருமணம் செய்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக புனர்வாழ்வு, மறுசீரமைப்பு அமைச்சின் புனர்வாழ்வுக்கான ஆணையாளர் பிரிகேடியர் எஸ். ரணசிங்க தெரிவித்தார்.



யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளுக்கு புனர்வாழ்வு நிலையங்களில் சுயதொழில் பயிற்சிகளும் புனர்வாழ்வுப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களில் ஒரு தொகுதியினருக்கு நாளை திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது.
திருமண பந்தத்தில் இணையும் அனைவருக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வு பம்பைமடுவில் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.குணசேகர இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’