வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 ஜூன், 2010

யாழ். பல்கலைக்கழகத்துக்கு இம்முறை 684 மாணவர்கள் அனுமதி பெற்றனர்

பல்கலைக்கழகத்துக்கு 20092010 ஆம் கல்வியாண்டுக்கு 684 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக அனுமதி பெறும் மாணவர்களின் விவரங்கள் அடங் கிய பட்டியல் யாழ். பல்கலைக் கழகத் துக்கு நேற்றுக் கிடைத்தன.

இந்த விவரப்பட்டியலின் பிரகாரம் சங்கீதம், நடனம், சித்திரமும் வடிவமைப் பும் ஆகிய கற்றை நெறிகளுக்கான பதிவு கள் எதிர்வரும் 9 ஆம் திகதியும்
பௌதிக விஞ்ஞானம், உயிரியல் விஞ் ஞானம், கணனி விஞ்ஞானம், சட்டம், விவ சாயம், சித்த மருத்துவம் ஆகிய கற்கை நெறி களுக்கான பதிவுகள் 12 ஆம் திகதியும்
மருத்துவக் கற்கை நெறிக்கான பதி வுகள் 13 ஆம் திகதியும் நடைபெறும் என்று அனுமதிக்களுக்கான உதவிப் பதிவாளர் ஆர். கிருஷ்ணகுமார் உதயனுக்குத் தெரி வித்தார்.
இந்தப் பதிவுகளை காலை 9 மணி முதல் பி.ப. 4 மணிவரை மேற்கொள்ள லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’