வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 ஜூன், 2010

பாக். எல்லையில் உணவு ஏற்றிச் சென்ற 50 வாகனங்கள் தீக்கிரை

ஆப்கானில் நிலை கொண்டுள்ள பன்னாட்டுப் படைகளுக்கு உணவு மற்றும் எரிபொருள் ஏற்றிச் சென்ற 50 வாகனங்களை இன்று அதிகாலை, பாக். எல்லையில் தலிபான்கள் தீக்கிரையாக்கியுள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் இராணுவம் முகாமிட்டுள்ளது. இவர்கள் தலிபான்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 
இவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை தலிபான்களும் தொடர்ச்சியாக நிகழ்த்தி வருகின்றனர். 
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் வட மேற்கு மற்றும் தென்மேற்கு எல்லையையொட்டி பன்னாட்டு படைகள் முகாமிட்டுள்ளன. இவர்களது வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் உணவு பொருட்களை ஏற்றிக்கொண்டு 50 வாகனங்கள் நேற்றிரவு புறப்பட்டுச் சென்றன. 
இன்று அதிகாலை அவை தர்னால் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவற்றை துப்பாக்கி ஏந்திய தலிபான் தீவிரவாதிகள் வழிமறித்துத் தாக்குதல் நடத்தினர். பின்னர் அவற்றுக்குத் தீ வைத்தனர். 
இதில் பொருட்கள் ஏற்றிச்சென்ற 50 வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. இச்சம்பவத்தில் 7 பேர் பலியானார் கள். 4 பேர் படுகாயமடைந்தனர். 
இச்சம்பவம் பாகிஸ்தான் எல்லையில், இஸ்லாமாபாத் -பெஷாவர் செல்லும் சாலையில் நடந்துள்ளது. சுமார் 10 முதல் 12 தலிபான் தீவிரவாதிகள் இதில் ஈடுபட்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’