இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மனியின் மீது வீசப்பட்டும், வெடிக்காத குண்டு ஒன்று இன்று வெடித்ததில் மூவர் உயிரிழந்தனர். அறுவர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் மத்திய ஜேர்மனியில் உள்ள கோயெட்டி ஜென் நகரில் இடம்பெற்றுள்ளதாகச் சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.மேற்படி குண்டு அங்கு கிடந்தமை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. 500 கிலோ எடையுள்ள அந்தக் குண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டனர். இதற்காக அப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த குண்டு பயங்கரமாக வெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. _
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’