வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 ஜூன், 2010

இந்தியத் திரைப்பட விழா : இந்தியக் கலைஞர்கள் பலர் வருகை

சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக இந்தியக் கலைஞாகள் பலர் இங்கு வந்துள்ளனர் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் 480 முக்கிய பிரமுகர்கள் (விஐபி) மற்றும் 5600 முதலாந்தர விருந்தினர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 2200 வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய, வெளிநாட்டுப் பிரமுகர்களை அழைத்து வருவதற்கு இந்திய ஏயார்லைன்ஸ் - ஸ்ரீ லங்கன் ஏயார் லைன்ஸ் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி பாதுகாப்புப் படையினரே, விழாவில் கலந்துகொள்ளும் இந்தியக் கலைஞர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு நேற்று இலங்கை வந்த விவேக் ஒபரோய், கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்து தெரிவிக்கையில்,
"அனைவரும் கொழும்புக்கு வாருங்கள். இந்தியத் திரைப்பட விழாவிலும் கலந்து கொள்ளுங்கள். விருது வழங்குவதை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்றே நம்புகின்றேன். பொலிவூட் திரைப்படங்கள் இரு நாடுகளுக்கிடையே உறவு பாலமாகத் திகழ்கின்றன. எனவே, இரு நாட்டு மக்களிடையே எவரும் தடுப்புச் சுவர் எழுப்ப முயலக்கூடாது" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’