வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 ஜூன், 2010

நுவரெலியா ஊடகவியலாளர் ஒன்றிய பொதுக்கூட்டம் எதிர்வரும் 12இல்

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் எதிர்வரும் 12 ஆம் திகதி நுவரெலியாவில் இடம் பெறவுள்ளது.

நுவரெலியா டிப்டொப் ஹோட்டலில் பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் இடம்பெறவுள்ளதாக ஒன்றியச் செயலாளர் எஸ்.தியாகு தெரிவித்தார்.
"நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் இந்த மாவட்டத்தின் பல்வேறு விடயங்களைச் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் ஒளிப்படங்களாகவும் வழங்கி சமூக மேம்பாட்டுக்காக உழைத்து வருகின்றனர். அத்துடன் நாட்டு மக்களுக்குத் தகவல்களை வழங்குபவர்களாகவும் திகழ்கின்றனர்.
இந்த ஊடகவியலாளர்களை அமைப்பு ரீதியாக ஒன்றிணைத்து இவர்களின் பல்வேறு தேவைகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதற்காகவே இந்த ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் இவ்வருடத்திற்கான பொதுக்கூட்டத்தையும் ஒன்றுகூடலையும் நுவரெலியாவில் வெகுவிமரிசையாக நடத்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
ஊடகத்துறையில் நீண்டகாலம் சேவையாற்றிவரும் ஊடகவியலாளர்களுக்கு நினைவு சின்னங்களும் நிகழ்வின்போது வழங்கப்படவுள்ளன எனத் தியாகு மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’