வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 ஜூன், 2010

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி சத்தியாக்கிரக போராட்டம்

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு கட்சி நாளைய தினம் சத்தியக்கிரக போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளது.
படைவீரர்களினால் ஈட்டப்பட்ட போர் வெற்றியை கொண்டாடும் வகையிலும், பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கிலும் இந்த சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறுவதாக சரத் பொன்சேகாவின் துணைவியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாளை காலை விஹாரமஹாதேவி திறந்த வெளி அரங்கில் இந்த சத்தியக்கிரக போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இன, மத, மொழி மற்றும் கட்சி பேதங்களைக் களைந்து அனைவரும் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அனோமா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’